மாவூர் அணையில் தண்ணீர் திறப்பு
கனமழை எதிரொலியாக மாவூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் 37 அடி உயரம் கொண்ட மாவூர் அணை உள்ளது. இந்த அணைக்கு சிறுமலை பகுதியில் இருந்து நீர்வரத்து எற்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடைரோடு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறையினர் அணையில் உள்ள 2 ஷெட்டர்கள் வழியாக தண்ணீரை திறந்து வைத்தனர். அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடைகள் வழியாக பள்ளப்பட்டி பகுதியில் உள்ள புதுக்குளம் கண்மாய், பொன்னன்குளம் கண்மாய், அகரன்குளம் கண்மாய்களை சென்றடைகிறது. அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story