புதிதாக திறக்கப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையதரைத்தளத்தில் இருந்து பஸ்கள் இயக்கம்
சேலம்
சேலம் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.96½ கோடியில் ஈரடுக்கு பஸ் நிலையமாக மறுசீரமைக்கப்பட்டன. அதன்படி பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கட்டப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 11-ந்தேதி திறந்து வைத்தார். பின்னர் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் சிறு பணிகள் நடைபெற்ற காரணத்தால் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன.
இந்த நிலையில் ஈரடுக்கு பஸ் நிலையத்தின் தரைத்தளத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்தது. இதையடுத்து தரைத்தளத்தில் இருந்து நேற்று பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் முதல் தளத்தில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story