புதிய வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கம்; மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
விளாத்திகுளம் அருகே புதிய வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரம், வீரகாஞ்சிபுரம், இ.வேலாயுதபுரம், வைப்பார் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்கள் கிராமங்கள் வழியாக விளாத்திகுளத்தில் இருந்து சிப்பிகுளத்துக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். அதேபோல் ஆற்றங்கரை, அச்சங்குளம் வழியாக வேடபட்டிக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். அவர் சிப்பிகுளம், வேடபட்டிக்கு அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து நேற்று மாலை விளாத்திகுளம் பஸ்நிலையத்தில் புதிய வழித்தடத்தில் அரசு பேருந்துகள் இயக்க தொடக்க விழா நடந்தது. ஜீ.வி.மார்க்கண்டேயன் புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர் அழகர்சாமி, விளாத்திகுளம் பணிமனை மேலாளர் மாடசாமி, பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணை தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.