சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பவானி அருகே சிங்கம்பேட்டை பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கைவிட கோரி ஈரோடு வடக்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பவானி பஸ் நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பி.கே.பழனிச்சாமி தலைமை தாங்கினார். தலைவர் செங்கை ரவி, ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ப.குணசேகரன், பவானி நகர அமைப்பாளர் சந்தோஷ் குமார், நகர பொறுப்பாளர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷம்
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை, ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜோதி குமாரவேல் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதுடன், சுங்கச்சாவடி அமைக்க கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்.
இதில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.வேல்முருகன், மாநில தலைமை அலுவலக ஊடக பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி, பவானி ஒன்றிய தலைவர் ரங்கநாதன், ஒலகடம் நகர செயலாளர் எல்.ஆறுமுகம், பவானி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தவசியம்மாள், அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளர் செல்வம், பவானி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன், மேட்டூர் மேற்கு கிளை பாசன விவசாயிகள் அமைப்பின் துணைத்தலைவர் தனபால், பவானி அந்தியூர் வட்டார விவசாயிகள் சங்கத்தின் இணை செயலாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஈரோடு வடக்கு மாவட்ட பொருளாளர் ஜி.வினோத்குமார் வரவேற்று பேசினார். பவானி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.