வாரிசு அரசியலை பேசாமல் பார்த்துக்கொள்ள கவர்னர் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு


வாரிசு அரசியலை பேசாமல் பார்த்துக்கொள்ள கவர்னர் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Jan 2023 2:24 PM IST (Updated: 9 Jan 2023 2:25 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபைக்கு கவர்னரை அழைத்து திமுக அரசு அவமதித்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டம் தொடங்கியது முதலே ஆளுநர், உரையை முறையாக படிக்கவில்லை. அண்ணா, பெரியார், திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை புறக்கணித்துள்ளார் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உறுப்பினர்கள் அவையில் முழக்கங்கள் எழுப்பி, பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து அரசு தயாரித்த உரையை முறையாக படிக்கவில்லை எனவும், அரசு தயாரித்த உரையின் பகுதியை மட்டுமே பேரவை ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குற்றம்சாட்டியதோடு, ஆளுநரின் உரையில் சில குறிப்புகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பேரவை தலைவர் அவர்களை கேட்டுக்கொண்டார் .முதல்வரின் இந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து கவர்னர் ஆர் என் ரவி தேசிய கீதம் இசைக்கும் முன்பே பேரவையில் இருந்து பாதிலேயே வெளியேறினார்.

இந்தநிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

திமுக அரசு ஒரு கேவலமான நாடகத்தை இன்று அரங்கேற்றி உள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டுள்ளது. திமுக நினைப்பதை கவர்னர் பேசவில்லை என்பதற்காக தமிழக சட்டசபைக்கு கவர்னரை அழைத்து அவமதித்துள்ளனர்.

கவர்னர் உரையை கூட அவரிடம் பேசி ஒப்புதல் வாங்காமல் இருப்பது உறவு பேணாத நிலையையே காட்டுகிறது. நீட் விவகாரத்தில் கவனர் கேட்டத்தை அரசு பொது வெளியில் ஏன் சொல்ல மறுக்கிறது.

கவர்னரை வைத்து தங்கள் சித்தாந்த்தை புகழ்பாட வைக்க முடியாது. வாரிசு அரசியலை பேசாமல் பார்த்துக்கொள்ள கவர்னர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இது தான் ஜனநாயகமா? என்றார்.


Next Story