தனியார் மதுக்கடைக்கு எதிர்ப்பு; அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்
தனியார் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுக்கடை,
தனியார் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
தேங்காப்பட்டணம் அருகே உள்ள வில்லாரிவிளை பகுதியில் மக்கள் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் கீழ்குளம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித மதுபான கூடங்கள் அமைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் தமிழ்நாடு ஆயத்தீர்வை துறை ஆணையர் சம்பந்தப்பட்ட பட்ட தனியார் மதுபான கடைக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அரசு அதிகாரிகள் தடையில்லா சான்று வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று கீழ்குளம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு போராட்டக் குழு தலைவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பால்மணி தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் அனிதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் ஒன்றிய தலைவர் கிரிஸ்டல் ரமணி பாய், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆஸ்கார் பிரடி, காங்கிரஸ் மனித உரிமைகள் துறை தலைவர் ராஜகிழன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோபால், பேரூராட்சி தலைவர் சரளா கோபால், பா.ஜ.க. சார்பில் சிவகுமார், கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.