பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: வாழதாசம்பட்டியில் மாணவர்கள் போராட்டம்


பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு:  வாழதாசம்பட்டியில் மாணவர்கள் போராட்டம்
x

பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழதாசம்பட்டியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம்

மேச்சேரி,

மேச்சேரி அருகே வாழதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசித்ரா, வன்னியனூர் நடுநிலைப்பள்ளிக்கும், வன்னியனூர் பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார், வாழதாசம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாழதாசம்பட்டியில் பள்ளி மாணவ- மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். பின்னர் சிறிது நேரம் அங்கேயே நின்று கோஷங்கள் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல் வன்னியூரிலும் தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story