அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ - ஜெயக்குமார் விமர்சனம்


அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ - ஜெயக்குமார் விமர்சனம்
x
தினத்தந்தி 2 Sept 2022 12:28 PM IST (Updated: 2 Sept 2022 12:29 PM IST)
t-max-icont-min-icon

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது

சென்னை,

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ;

அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழும் வகையில் தீர்ப்பு .அதிமுக பொதுக்குழு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு .அதிமுக இடைக்கால பொது செயலாளர் மற்றும் ஒற்றை தலைமை இபிஎஸ் என்பதை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு உறுதிப்படுத்தியது மகிழ்ச்சி.இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டு சென்றால், அதை எங்கள் சட்டவல்லுநர்கள் பார்த்துக் கொள்வார்கள்.அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ. , நாங்கள் சட்டப்படி செல்வதால் எங்கு சென்றாலும் வெற்றி பெருவோம் என்றார். தங்களிடம் தர்மம், நியாயம் இருப்பதால் தர்மம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story