ஆதவா தொண்டு நிறுவனத்தின் சார்பில் குடும்ப சைவ உணவகம் திறப்பு விழா
ஆதவா தொண்டு நிறுவனத்தின் சார்பில் குடும்ப சைவ உணவகம் திறப்பு விழா நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் செயல்பட்டு வரும் ஆதவா தொண்டு நிறுவனம் சார்பில் ஆதவா குடும்ப சைவ உணவகம் திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது. உணவகத்தை தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி உமரிசங்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் குத்துவிளக்கேற்றி வைத்தார். ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து துணை தலைவர் அ.கல்யாண சுந்தரம், நகர தி.மு.க. செயலாளர் அ.க. நவநீத பாண்டியன், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே. கமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆதவா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜெ. பாலகுமரேசன் வரவேற்று பேசினார். மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் பாரி கண்ணன், சாத்ராக், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், சந்திரசேகர், சிவக்குமார், புனிதா சேகர், ஆத்தூர் நகர பஞ்சாயத்து உறுப்பினர் கேசவன், கருணாகரன், ஆதவா தொண்டு நிறுவன தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் குணம், ஆறுமுகநேரி ராஜமன்யபுரம் ஊர் தலைவர் எஸ்.பழனிவேல் நாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.