வேலைநிறுத்த விளக்க வாயிற் கூட்டம்
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்த விளக்க வாயிற் கூட்டம் அரசு விரைவு
நாகர்கோவில்,
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வலியுறுத்தியும், ஓய்வு பெற்றோருக்கான 80 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும் வருகிற 3-ந் தேதி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் போராட்டம் அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் வாயிற் கூட்டம் நடந்தது. நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடந்த வாயிற்கூட்டத்துக்கு பணிமனை உதவி தலைவர் பகவதியப்பன் தலைமை தாங்கினார். மத்திய சங்க நிர்வாகி ஜான்ராஜன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு. பணிமனை செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மத்திய சங்க நிர்வாகி செர்கான், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் பொன்.சோபனராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகள விளக்கி பேசினர். ரபீக், முத்துகிருஷ்ணன், ரவிசங்கர், ஓய்வுபெற்றோர் நல அமைப்பை சேர்ந்த மரிய வின்சென்ட், வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடந்த வாயிற்கூட்டத்துக்கு சி.ஐ.டி.யு. நிர்வாகி துரைப்பழம் தலைமை தாங்கினார். சிவகுமார் முன்னிலை வகித்தார். செல்வன், மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் டென்னிஸ் ஆன்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
--------
---