ஆவின் ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டது கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்


ஆவின் ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டது கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்
x

ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆவின் ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டதற்கு கண்டனத்திற்குரியது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:-

ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள். மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்" என்றார்.


Next Story