அண்ணா பிறந்தநாள் விழா சொற்பொழிவு


அண்ணா பிறந்தநாள் விழா சொற்பொழிவு
x

அண்ணா பிறந்தநாள் விழா சொற்பொழிவு

திருப்பூர்

முத்தூர்

நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை, ஆங்கிலத்துறைஆகியவை இணைந்து நடத்திய வாங்க பேசலாம் என்ற மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பயற்சியை நடத்தியது. இதில் முன்னாள் அண்ணாவின் பன்முக ஆளுமை பற்றிய சிறப்பு சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சே.ப. நசீம் ஜான் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் வெ.பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் ஆங்கிலத்துறை பேராசிரியர் பா.தேவகி, கணிதவியல் துறை உதவி பேராசிரியர் ப.குருசாமி, தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் பி.நளினி, க.சிவக்குமார் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினார்கள். தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் கவுரி, அபிநயா சங்கீதா, சுவேகா, முத்துலட்சுமி, கவுசல்யா, கோமதி, ராமலட்சுமி, மாதவன், சஞ்சய், காயத்ரி, இலியாஸ் ஆகியோர் அறிஞர் அண்ணா வாழ்க்கை பயண நிகழ்வுகள் பற்றி கட்டுரை எழுதி வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சிகளை கல்லூரி மாணவிகள் தனலட்சுமி, சாலினி, காயத்ரி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.முடிவில் கல்லூரி மாணவி வி.லட்சுமி நன்றி கூறினார்.



Next Story