116 பேருக்கு பயிற்சிக்கான ஆணை


116 பேருக்கு பயிற்சிக்கான ஆணை
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடத்தூரில் இளைஞர் திறன் வளர்ப்பு திருவிழாவில் 116 பேருக்கு பயிற்சிக்கான ஆணையை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் இளைஞர் திறன் வளர்ப்பு மேம்பாட்டு திருவிழா நடைபெற்றது. இதில் இளைஞர்கள், பெண்கள் என 370 பேர் பங்கேற்றனர். மேலும் தனியார் நிறுவனத்தினர் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். இதில் 116 பேர் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலெக்டர் சாந்தி பயிற்சிக்கான ஆணைகளை வழங்கி பேசினார். விழாவில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு, ஒன்றியக்குழு தலைவா் உதயா மோகனசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலா்கள் ரேணுகா, கல்பனா, பேரூராட்சி தலைவர் மணி, கவுன்சிலர் முனிராஜ், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் கார்த்திகேயன், ராஜேஸ், வட்டார இயக்க மேலாளர் ரமேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மோட்டாங்குறிச்சியில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் நடத்தப்படும் காளான் உற்பத்தி மையத்தை கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.


Related Tags :
Next Story