நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மானியத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மானியத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
சேலம்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 984 பயனாளிகள் மானியத்தொகையில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சேலம் தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்மேகம் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினர்.
விழாவில் கலந்து கொண்ட வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசும் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்களை வழங்கி வருகிறார். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார். தமிழகத்தில் குடிசை வீடுகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதற்காக மானியத்துடன் வீடு கட்டிக்கொள்ள இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். 3 தவணைகளில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று கூறினார். இதில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, அருள் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.