சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோவில் கைது செய்ய உத்தரவு


சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோவில் கைது செய்ய உத்தரவு
x

குடியாத்தத்தில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மீது கலெக்டர் உத்தரவின்பேரில் போக்சோ சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தத்தில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மீது கலெக்டர் உத்தரவின்பேரில் போக்சோ சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சில்மிஷம்

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ராமன் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக வந்த புகார்களின் பேரில் பெற்றோரும் பொதுமக்களும் சில தினங்களுக்கு முன்பு பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ராமன் பொன்னை அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்ஜித் உள்ளிட்ட குழுவினர் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து ஆசிரியர் ராமன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அறிக்கை அனுப்பினர்.

கலெக்டர் உத்தரவு

அதன்படி நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டதால் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகார் அளித்தார்.

அதன்பேரில் ராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா வழக்கு பதிவு செய்தார். மேலும்அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா உள்ளிட்ட போலீசார் நேற்று சுமார் 5 மணி நேரம் நடுப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் தனித்தனியாக சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

கல்வி அலுவலர் விசாரணை

மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மாணவிகளிடம் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஆசிரியர் ராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story