மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.67½ கோடி கடன் தள்ளுபடி செய்ததற்கான ஆணை


மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.67½ கோடி கடன் தள்ளுபடி செய்ததற்கான ஆணை
x

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.67½ கோடி கடன் தள்ளுபடி செய்ததற்கான ஆணையை அமைச்சர் காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 9 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 4 கூட்டுறவு நகர வங்கிகள் மூலம் 2,744 மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 32,093 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.67 கோடியே 59 லட்சம் மதிப்பிலான கடன் தொகை தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணையினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, திட்ட இயக்குனர் லோகநாயகி, முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மா ஆபிரஹாம் மற்றும் நகர மன்ற தலைவர்கள், ஒன்றியக் குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story