மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை - தமிழக அரசு அறிவிப்பு


மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை - தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 10:54 AM IST (Updated: 23 Nov 2022 10:55 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு'அரசாணை வெளியிட்டுள்ளது.

சீர்காழி,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்தது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன.

மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 இழப்பீடு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு'அரசாணை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ .1000 வழங்க ரூ .16 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ .1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story