100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல்
நத்தம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
கந்திலி ஒன்றியம் நத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் 1,000 பேருக்கு ஓ.ஆர்.எஸ். கரைச்சல் வழங்கும் நிகழ்ச்சி நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் துரை தலைமை வகித்தார். கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார், 100 நாள் பயனாளிகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தீபா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தன், மற்றும வார்டு உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் லதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story