ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. ஆய்வு


ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. ஆய்வு
x

ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. ஆய்வு

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு, வாட்டாகுடி, வாய்மேடு, தகட்டூர், தென்னடார், பஞ்சநதிக்குளம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தண்ணீரில் மூழ்கி உள்ள நெல்மணிகள் முளைக்க தொடங்கி விட்டன.

தகவல் அறிந்ததும் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ., வாய்மேடு, மூலக்கரை, தென்னடார், பஞ்சநதிக்குளம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை வயல்களில் இறங்கி நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது சேதமடைந்த நெற்பயிர்களை விவசாயிகள் எம்.எல்.ஏ.விடம் காண்பித்த போது அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், ஒன்றியக்குழு துணை தலைவர் அறிவழகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story