ஆஸ்கார் கல்லூரி பட்டமளிப்பு
கோவில்பட்டியில் ஆஸ்கார் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஆஸ்கார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சுப்புராஜ், இயக்குனர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பத்மாவதி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரி முதல்வர் சாந்தி மகேஸ்வரி கலந்துகொண்டு கல்லூரியில் சமையல் கலை மற்றும் விருந்தோம்பல் பாடப்பிரிவில் இளங்கலை முடித்த மாணவ- மாணவிகள் 52 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி கேட்டரிங் துறை தலைவர் ராஜ்மோகன் உணவுத் துறையின் முக்கியத்துவம், வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றி பேசினார். பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சிவகாசி ஆஸ்கார் கல்லூரி முதல்வர் செல்வராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story