ஒட்டநத்தம்சந்தன மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா


ஒட்டநத்தம்சந்தன மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x

ஒட்டநத்தம் சந்தன மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் சந்தன மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவில் வில்லிசை நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் சிகர நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், 9.30 மணிக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சந்தன மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மதியம் 2 மணிக்கு பெண்கள், மாணவிகளுக்கான அறிவுத்திறன் போட்டி, மதியம் 3 மணிக்கு கோவில் வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு கணியன்கூத்து நிகழ்ச்சி, 8 மணிக்கு அம்மனை வாழ்த்திப்பாடி கும்மிடியத்தல், 9 மணிக்கு கரகாட்டம் நடக்கிறது.

நாளை (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சந்தன மாரியம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பக்தர்கள் மாவு விளக்கு, முளைப்பாரி எடுத்து வழிபடுகின்றனர். காலை 8 மணிக்கு கோவில் முன்பு பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.


Next Story