நமது முரசு, நாளைய தமிழக அரசு : பிரேமலதா விஜயகாந்த்


நமது முரசு, நாளைய தமிழக அரசு : பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:37 PM IST (Updated: 25 Aug 2023 1:02 PM IST)
t-max-icont-min-icon

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்தின் பிறந்தநாளை தேமுதிகவினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். விஜயகாந்த், தனது பிறந்த நாளையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து வருகிறார். அங்கு திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து அவர் கையசைத்தார். கூடியிருந்த தொண்டர்களும் ஆரவாரத்துடன் கேப்டன், கேப்டன் என முழக்கமிட்டனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தை சந்திக்க கூடியிருந்த தொண்டர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்படவுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நலமாக இருக்கிறார். விஜயகாந்த் நீண்டகாலம் இருப்பார். நமது முரசு, நாளைய தமிழக அரசு என்றார்.


Next Story