கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கல்லணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தண்ணீரில் குளித்தும், சிறுவர்-சிறுமிகள் விளையாடியும் மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்த பொதுமக்களுக்கும் சிறந்த சுற்றுலா தலமாக கல்லணை விளங்கி வருகிறது. இங்கு சிறுவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.தற்போது கல்லணையில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் விடுமுறை தினமான நேற்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

குளித்து மகிழ்ந்தனர்

அவர்கள், கல்லணையை கட்டிய கரிகாலன் பூங்கா, கரிகாலன் மணி மண்டபம், சிறுவர் பூங்கா ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்தனர். பின்னர் சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் சிறுவர்-சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கல்லணை பூங்கா அருகில் உள்ள கோவிலடி கிளை வாய்க்காலில் குளித்து மகிழ்ந்தனர் பெண்கள், கல்லணை பாலத்தின் மேல் நின்றவாறு காவிரியில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி செல்வதை பார்த்து ரசித்தனர்.

கல்லணைக்கு நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் கார் நிறுத்தும் இடத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதேபோல, கரிகாலன் சிலைக்கு அருகில் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.



Next Story