மத்திய அரசு திட்டமிட்டுள்ள 100 கல்லூரிகளில் தமிழகத்துக்கு 7 மருத்துவ கல்லூரிகளை முயன்று பெற வேண்டும்


மத்திய அரசு திட்டமிட்டுள்ள 100 கல்லூரிகளில் தமிழகத்துக்கு 7 மருத்துவ கல்லூரிகளை முயன்று பெற வேண்டும்
x

மத்திய அரசு திட்டமிட்டுள்ள 100 கல்லூரிகளில் தமிழகத்துக்கு 7 மருத்துவ கல்லூரிகளை முயன்று பெற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் மருத்துவ கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவ கல்லூரிகளை மாநில அரசுகளுடன் இணைந்து அமைக்க மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.

அத்துடன் மத்திய அரசு நிதியுதவியுடன் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 157 மருத்துவ கல்லூரிகளில் நர்சு கல்லூரிகளையும் தொடங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் அத்தியாவசியத் தேவையான மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனான இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.

மத்திய அரசின் சார்பில் இதுவரை 3 கட்டங்களாக 157 மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. அவற்றில் தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகள் உள்பட மொத்தம் 93 மருத்துவ கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள கல்லூரிகளும் அடுத்த கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

இத்தகைய சூழலில் தான் 4-வது கட்டமாக 100 மருத்துவ கல்லூரிகளை 2027-ம் ஆண்டுக்குள் தொடங்க திட்டமிட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது.

எனவே, மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்படவுள்ள 100 மருத்துவ கல்லூரிகளில், தமிழகத்தில் இதுவரை மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படாத மாவட்டங்களுக்கு 6, கடலூர் மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 7 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு இப்போதிலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.


Next Story