ஊத்துப்பட்டி அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு


ஊத்துப்பட்டி அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு
x

ஊத்துப்பட்டி அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12- ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆர். சத்தியா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story