வடகாட்டில் விற்பனைக்கு வந்திருந்த வெளிமாநில நாவல்பழம்


வடகாட்டில் விற்பனைக்கு வந்திருந்த வெளிமாநில நாவல்பழம்
x

வடகாட்டில் விற்பனைக்கு வந்திருந்த வெளிமாநில நாவல்பழம் கிலோ ரூ.320-க்கு விற்பனையானது.

புதுக்கோட்டை

வடகாடு:

தமிழகத்தில் இன்னும் நாவல் பழங்கள் உற்பத்தி துவங்காத நிலையில், ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு வரும் நாவல்பழங்கள் தமிழகத்தின் பிற பகுதிகளில் விற்பனை ஆகி வரும் நிலையில், வடகாட்டிலும் விற்பனைக்கு வந்திருந்தது. சர்க்கரை நோய்க்கு சிறந்தது என்பதால் பலர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். நாவல் பழத்தின் விலை கிலோ ரூ.320-க்கு விற்பனை ஆவதால் பலர் தயக்கம் காட்டிய போதிலும், வாகனங்களில் சென்றவர்களே அதிக அளவில் வாங்கி செல்வதாகவும் கூறப்படுகிறது.


Next Story