ஆம்பூர் அருகே பாலாற்று தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது

ஆம்பூர் அருகே பாலாற்று தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது
x

ஆம்பூர் அருகே பாலாற்று தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே பாலாற்று தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது

தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக ஆம்பூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பச்சகுப்பம் பகுதியிலிருந்து குடியாத்தம் மற்றும் நரியம்பட்டு பகுதிகளை இணைக்கும் பாலாற்று தரைப்பாலத்தில் வெள்ளம் ஏற்பட்டு பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் வழியாக சென்று வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருபுறமும் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story