பென்னாத்தூர் பேரூராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் முகாம்


பென்னாத்தூர் பேரூராட்சியில்  ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் முகாம்
x

பென்னாத்தூர் பேரூராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் தீவிரமாக நடந்தன.

வேலூர்

அடுக்கம்பாறை

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதை உடனடியாக சரி செய்ய மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பென்னாத்தூர் பேரூராட்சி 9-வது வார்டில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி முகாம் நேற்று நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் பவானி சசிகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜீவசத்யராஜ், வார்டு கவுன்சிலர் லட்சுமிஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன் வரவேற்றார்.

அதில் தெருக்களை சுத்தம் செய்தல், பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைத்தல், கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல், கொசு மருந்து தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் மற்றும் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி பணியாளர் திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story