வழிந்தோடும் கழிவுநீர்; சுற்றுலா பயணிகள் அவதி


வழிந்தோடும் கழிவுநீர்; சுற்றுலா பயணிகள் அவதி
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி ரெயில் நிலையம் முன்பு கழிவுநீர் வழிந்தோடுவதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இதை விரைந்து சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி ரெயில் நிலையம் முன்பு கழிவுநீர் வழிந்தோடுவதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இதை விரைந்து சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

ரெயில் நிலையம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி ரெயில் நிலையம் கடந்த 1908-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து மலை ரெயில் இயக்கப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக ஊட்டி மலை ரெயில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். குன்னூர், லவ்டேல் வழியாக ஊட்டியில் வந்திறங்கும் பயணிகள், வெளியே வரும்போது முகம் சுழிக்கின்றனர். இதற்கு ரெயில் நிலைய நுழைவுவாயில் முன்பு கழிவுநீர் வழிந்தோடி வருவதே காரணம் ஆகும்.

சரிசெய்ய வேண்டும்

அந்த வழியாக வாகனங்கள் ரெயில் நிலைய வளாகத்துக்குள் செல்லும் போது, கழிவுநீரை அடித்த படி செல்வதால் சுற்றுலா பயணிகள் படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து கழிவுநீர் வழிந்தோடுவதால், சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

ஊட்டிக்கு பயணம் செய்தால் இந்த மலை ரெயிலில் பயணம் செய்யலாம் என்பது போய், இந்த மலை ரெயிலில் பயணம் செய்வதற்காகவே ஊட்டிக்கு பயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு வந்து இறங்கி ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வரும்போது கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. இதைப் பார்க்கும்போது நீண்ட நாட்களாக கழிவுநீர் ஓடுவது போல் தெரிகிறது. எனவே, கழிவுநீர் வழிந்தோடுவதை சரிசெய்ய விரைந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story