ரூ.9¼ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ரூ.9¼ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறக்கப்பட்டது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரி அஸட் சார்பில் மட்டுமின்றி சென்னை காவிரிப் படுகை சார்பிலும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு குடிநீர்த் தொட்டிகள், சிறு பாலங்கள், மருத்துவ முகாம்கள், புயல் வெள்ள நிவாரண உதவிகள், பள்ளிக் கட்டிடங்கள் சீரமைப்பு, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ஒன்றியம் தப்ளாம்புலியூர் ஊராட்சி வாஞ்சூர் கிராமத்தில் ரூ.9.26 லட்சத்தில் கே.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவனத்தால் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு விடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சென்னை காவிரி படுகை செயல் இயக்குனர் யாதவா, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்கு விட்டனர். பின்னர் சென்னை காவிரி படுகை செயல் இயக்குனர் யாதவா கூறுகையில், எனது தலைமை அலுவலகம் சென்னையில் இருந்தாலும், அனைத்து மாவட்டங்களின் அடிப்படை தேவைகள் குறித்தே இருக்கும். இது போன்ற சமூக நலப் பணிகள் தொடரும் என்றார். இதில் ஊராட்சி தலைவர் கணேசமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் கருணாகரன், ஓ.என்.ஜி.சி. முதன்மைப் பொது மேலாளர் சுந்தரம், வட்டார மேலாளர் ஆறுமுகம், மனிதவள பொது மேலாளர் வெங்கட்ராமன், பொதுமேலாளர் ராஜேந்திரன், பகுதி மேலாளர் சரவணன், சமுகப் பொறுப்புணர்வு திட்ட அதிகாரிகள் பாலசுப்ரமணியன், சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் நடராஜன் மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.