கயத்தாறு அருகே அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பறிமுதல்


கயத்தாறு அருகே அளவுக்கு அதிகமாக லோடு   ஏற்றி வந்த லாரி பறிமுதல்
x

கயத்தாறு அருகே அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகளில் இருந்து நூற்றுக்கணக்கான டாரஸ் லாரிகள், டெய்லர் லாரிகளில் அளவு அளவுக்கு அதிகமாக கற்களையும், எம்.சாண்ட் போன்ற கனிமங்களை ஏற்றிக்கொண்டு வருவதால் கிராமப்புற சாலைகள் பழுதடைந்து விடுகின்றன. இதனால் இப்பகுதிகிராமமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் தூத்துக்குடி கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர். கலெக்டர் உத்தரவின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனிதீலீப் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று கயத்தாறு அருகே அளவுக்கு அதிகமாக 40 முதல் 60 டன் லோடு ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அந்த லாரி உரிமையாளருக்கு ரூ.23ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இனிமேல் இதுபோன்று அளவுக்கு அதிகமாக கனிமங்களை லாரிகளில் ஏற்றி வரக்கூடாது என லாரி டிரைவர்கள், உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.


Next Story