பேராவூரணி தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா?


பேராவூரணி தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா?
x
தினத்தந்தி 6 Jun 2023 3:18 AM IST (Updated: 6 Jun 2023 10:17 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணி தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.

தஞ்சாவூர்

பேராவூரணி, ஜூன்.6-

பேராவூரணி தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.

தீயணைப்பு நிலையம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் கடந்த 1986 -ம் ஆண்டு, முதன்முதலாக தீயணைப்பு நிலையம் தொடங்கப்பட்டது. சேதுசாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 2008 -ம் ஆண்டு வரை இந்த தீயணைப்பு நிலையம் இயங்கி வந்தது.2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை, ஆவணம் சாலையில் தனியாருக்கு சொந்தமான வாடகைக் கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது.

சொந்த கட்டிடம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டை சாலையில், அரசு கால்நடை மருத்துவமனை அருகே, அரசுக்கு சொந்தமான இடத்தில், தீயணைப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.விரைவில் அந்த இடத்திலோ அல்லது அரசுக்கு சொந்தமான இடத்திலோ, சொந்தக் கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் தொடங்க வேண்டும். தீயணைப்பு நிலைய பணியாளர்கள் பலரும் வாடகைக்கு குடியிருந்து வரும் நிலையில், அவர்களுக்கு பணியாளர் குடியிருப்பும் இல்லை. எனவே வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story