கோவில்பட்டியில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் தீ விபத்து


கோவில்பட்டியில் டிராவல்ஸ் உரிமையாளர்   வீட்டில் தீ விபத்து
x

கோவில்பட்டியில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து சாம்பலாகின

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி இந்திரா நகர் வெற்றி விநாயகர் கோவில் தெருவில் குடியிருப்பவர் நடராஜன் மகன் நாகராஜ் (வயது 52). இவர் இளையரசனேந்தல் ரோட்டில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இவரது வீட்டில் சமையலறையில் மின் கசிவு காரணமாக திடீரென்று தீப்பிடித்தது. இதனால் வீட்டில் இருந்த நாகராஜன் மற்றும் குடும்பத்தினர் வெளியேறி தப்பினர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அலுவலர் சுந்தரராஜ் தலைமையில் வந்து 3 மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் வீட்டில் பெரும் பகுதி அறைகளில் இருந்த மின் சாதனங்கள், சோபா, கட்டில், பீரோ, குளிர் சாதன எந்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இத்தீவிபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story