விதிமுறை மீறி இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ரூ.53½ லட்சம் அபராதம்


விதிமுறை மீறி இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ரூ.53½ லட்சம் அபராதம்
x

விதிமுறை மீறி இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ரூ.53½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்

சேலம்:

சேலம் மாவட்டம் சங்கிரி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர் ஆத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டத்திற்குட்பட்ட பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பல இடங்களில் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் லாரி, வேன், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனை நடத்தினர். அதில் 1,866 வாகனங்கள் விதிமுறை மீறி இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது, கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் விதி மீறி இயக்கிய 1,866 வாகன உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.53 லட்சத்து 49 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிக பாரம் ஏற்றி வந்தது மற்றும் உரிமம் இல்லாமல் வாகனங்கள் இயக்கியது தொடர்பாக லாரிகள் உள்ளிட்ட 154 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 5 மாதங்களாக சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 189 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று கூறினர்.


Next Story