எருது விடும் விழா


எருது விடும் விழா
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணத்தில் எருது விடும் விழா நடந்தது.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் சந்தைப்பேட்டையில் உள்ள சக்தி விநாயகர் கோவில் முன்பு எருதுவிடும் விழா நடந்தது. ஊர் கவுண்டர் மகேந்திரன் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து விழாவை தொடங்கி வைத்தார். கருக்கன்சாவடி, ஜமேதார் மேடு, நரிமேடு, சந்தாபுரம், காவேரிப்பட்டணம் பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட எருதுகள் விடப்பட்டன. இதில் எருதுகளை பிடிக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். எருது விடும் விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி, வாணவேடிக்கை, நடைபெற்றது. விழாவையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story