கோவில் காளைக்கு பதில் ஊர் தலைவரை கயிறு கட்டி இழுத்து வந்த கிராமமக்கள்
போச்சம்பள்ளி அருகே எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுப்பு தெரிவித்ததால் கோவில் காளைக்கு பதில் ஊர் தலைவரை கயிறு கட்டி கிராமமக்கள் இழுத்து வந்தனர்.
கிருஷ்ணகிரி
மத்தூர்
போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பத்தில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பொங்கல் திருவிழாவையொட்டி எருதாட்டம் ஆண்டுதோறும் நடைபெறும். எருதாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். இதனால் கிராம மக்கள் கோவில் எருதாட்டத்தில் காளைக்கு பதில் ஊர் கவுண்டர் சசி என்பவரை இருபுறமும் கயிறுகளை கட்டி இழுத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இந்த காளைக்கு பதிலாக ஊர் தலைவரை கயிறு கட்டி இழுத்து வந்த சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story