ஓசோன் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்


ஓசோன் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தரங்கம்பாடியில் ஓசோன் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

தரங்கம்பாடியில் ஓசோன் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாரத்தான் ஓட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல்,மே, ஜூன்,ஜூலை ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று அதிக அளவில் வீசுகிறது. உடல் நலத்துக்கு நன்மையளிக்கக் கூடிய ஓசோன் காற்றை சுவாசிப்பதற்காக இப்பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் ஓசோன் காற்றின் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

மாணவ, மாணவிகள் மற்றும் பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பொறையாறு புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டமானது பழைய பஸ் நிலையம் வீரப்ப பிள்ளைத்தெரு, காத்தான்சாவடி, சாத்தங்குடி, தரங்கம்பாடி கடைத்தெரு, ராஜா வீதி வழியாக 4 கிலோமீட்டர் தூரம் சென்று தரங்கம்பாடி கடற்கரையில் முடிவடைந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல், துணைத்தலைவர் பொன்ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், உள்ளிட்ட சுற்றுலா அலுவலர், அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் போட்டியில் மயிலாடுதுறை, நாகை திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள்,பெரியவர்கள் பங்கேற்றனர்.


Next Story