பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் அரசு சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
திருச்செந்தூரிலுள்ள பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை தேசிய கொடி ஏற்றப்பட்டது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் நேற்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும் மணிமண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் தேசிய கொடி ஏற்றினார்.
நிகழ்ச்சியில், ஆதித்தனார் கல்லூரி தேசிய மாணவர் தரைப்படை பிரிவு அதிகாரி சிவமுருகன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்னுத்துரை மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story