பச்சைக்காளி, பவளக்காளி ஊஞ்சல் உற்சவம்
திருவிடைமருதூரில் பச்சைக்காளி, பவளக்காளி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்:
திருவிடைமருதூர் மெயின் ரோட்டில் இலுப்பணிதெரு மற்றும் மேட்டுதெருவில் 75-வது ஆண்டு மகோற்சவ விழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 7-ந்தேதி பவளக்காளி புறப்பாடும்,8-ந் தேதி பச்சை காளியம்மன் புறப்பாடும் நடைபெற்றது. பச்சைக்காளி, பவளக்காளி அம்மன் வீதி உலா முடிந்து நேற்று கோவில் திரும்பியது. நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சைக்காளி, பவளக்காளி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பல்வேறு வகையான இனிப்பு பலகாரங்கள், பழங்கள் வைக்கப்பட்ட மாபெரும் படையல் போடப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story