வடலூர் அருகே பச்சை வாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்


வடலூர் அருகே பச்சை வாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 6:56 AM IST)
t-max-icont-min-icon

வடலூர் அருகே பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

கடலூர்


வடலூர்,

வடலூர் அருகே ஆபத்தாரணபுரத்தில் பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை திருக்கல்யாணமும், பிற்பகல் 3 மணி அளவில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. அப்போது காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் இரவில் தெருக்கூத்து நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story