பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா
வடலூர் அருகே பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று நடக்கிறது.
கடலூர்
வடலூர்,
வடலூர் ஆபத்தாரணபுரத்தில் பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story