பேச்சிப்பாறை அணை மூடப்பட்டது


பேச்சிப்பாறை அணை மூடப்பட்டது
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:46 PM GMT)

அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணை மூடப்பட்டது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணை மூடப்பட்டது.

மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப்பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஆறுகளிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு மற்றும் முக்கடல் அணைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதே போன்று மலையோரப் பகுதிகளான சுருளகோடு, குலசேகரம், திருவரம்பு, திற்பரப்பு, கடையாலுமூடு உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் மழை பெய்தது. இதுதவிர பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்துப்பகுதிகளான மேல் கோதையாறு, கீழ் கோதையாறு பகுதிகளிலும் மழை கொட்டியது.

பேச்சிப்பாறை அணை மூடப்பட்டது

மாவட்டத்தில் பாசன பணிகள் நிறைவடைந்த நிலையில் அனைத்து அணைகளும் மூடப்பட்டன. எனினும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதைத்தொடர்ந்து பேச்சிப்பாறை அணை நேற்று மாலை 6 மணிக்கு முழுமையாக மூடப்பட்டது. வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடுவதும் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story