பச்சியம்மன் கோவிலில் யாக பூஜை


பச்சியம்மன் கோவிலில் யாக பூஜை
x

கொளகத்தூர் பச்சியம்மன் கோவிலில் நடந்த யாக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

தர்மபுரி அடுத்த கொளகத்தூரில் பச்சியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் திரவுபதியம்மன் கோவிலில் இருந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கங்கை பூஜையும், தீர்த்தக்குட ஊர்வலமும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கும்ப பூஜை நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) அம்மனுக்கு மறுபூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story