கருமாத்தூர் பூசாரிபட்டியில் பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் பூசாரிபட்டியில் பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
செக்கானூரணி
உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் பூசாரிபட்டியில் கழுவநாதர், மாயாண்டி சுவாமி, விருமன் மற்றும் பேச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கோவிலில் மூலவ தெய்வமாக பேச்சியம்மனாக பார்வதியும், கழுவநாதன் எனும் கலியுக நாதனாக சிவபெருமானும், காவல் தெய்வமாக குதிரை மீது விருமாண்டியாக பிரம்மாவும், மாயனாக விஷ்ணுவும் என மூவரும் ஒரே இடத்தில் அமைந்துள்ள தலமாக விளங்குகிறது. இந்நிலையில் கும்பாபிேஷக விழாவையொட்டி சிவாச்சாரியார்கள் சேவற்கொடியோன் தலைமையிலான குழுவினர் 6 கால யாகபூஜைகள் செய்தனர். தொடர்ந்து கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.