பொதிகை எக்ஸ்பிரஸ் 18-வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி


பொதிகை எக்ஸ்பிரஸ் 18-வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை ெரயில் நிலையத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் 18-வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி- கேக் வெட்டி கொண்டாடினர்

தென்காசி

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இயக்கப்பட்டு 18-வது ஆண்டையொட்டி சிறப்பு நிகழ்ச்சி செங்கோட்டை ெரயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கோட்டை ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், செங்கோட்டை வர்த்தக சங்கத்தினர், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பெரியபிள்ளை வலசை பஞ்சாயத்து தலைவர் வேலுச்சாமி, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ெரயிலின் மெயின் லோக்கோ பைலட் கிறிஸ்டோபர், அசிஸ்டண்ட் லோக்கோ பைலட் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டினர். கேக் வெட்டி வழங்கினர்.

நிகழ்ச்சியில் செங்கோட்டை ெரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள், மக்கள் தொடர்பு அலுவலர் ராமன், செங்கோட்டை வர்த்தக சங்க தலைவர் ரஹீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story