நலிவடைந்த குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு


நலிவடைந்த குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி கோவில்பட்டியில் நலிவடைந்த குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் நலிவடைந்த 25 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பாலமுருகேசன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன், சங்க பொருளாளர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நலிவடைந்த 25 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விஸ்வகர்ம நகை தொழிலாளர் சங்க தலைவர் முருகேசன், துணைத்தலைவர் மாடசாமி, செயலாளர் மாரிமுத்து, துணைச் செயலாளர் அருணாச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story