படைவெட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
பாபநாசம் படைவெட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
தஞ்சாவூர்
பாபநாசம்:
பாபநாசம் காட்டுநாயக்கன் பழங்குடியினர் தெருவில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. முன்னதாக காப்பு கட்டுதல், கரகம் காவடி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் நிறைவு நாளில் ஊர் மக்கள் ஒன்று திரண்டு அம்மனை தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்து சேலை, பழம், பூ உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று படைவெட்டி மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்
Related Tags :
Next Story