பாதயாத்திரை பக்தர்கள் சிறப்பு வழிபாடு
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தென்காசி
பாவூர்சத்திரம்:
திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் சார்பில் 33-ம் ஆண்டு பொது பூஜை பாவூர்சத்திரம் வென்னிலை முருகன் கோவிலில் நடைபெற்றது. பாவூர்சத்திரம் திருமுருகன் திருச்சபை, திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் வழிபாடு நடைபெற்றது. பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து இரவு பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் பொது பஜனையும், சக்தி பூஜையும் நடைபெற்றது. இதில் முருக பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பாடல்களை பாடினர். திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story