காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை தொடக்கம்
கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை தொடங்கப்பட்டது.
மாவட்ட பொதுச்செயலாளர் வந்தவாசி வசந்தராஜ் தலைமை தாங்கினார். கண்ணமங்கலம் பகுதி கவுன்சிலர் மணி, நகர காங்கிரஸ் தலைவர் வானமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.
இதில் 2024-ம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் மத்திய அரசு அமைப்பது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாதயாத்திரை தொடங்கியது.
இந்த பாதயாத்திரை வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
Related Tags :
Next Story