நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் கதி என்ன?


நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் கதி என்ன?
x

அம்பை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

தென்காசி

தென்காசி சொர்ணபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்னுலாப்தீன். இவருடைய முதல் மகனின் மருத்துவ வசதிக்காக பொட்டல்புதூரில் தங்கி உள்ளனர். இவருடைய 2-வது மகன் ரஜப் மீரான் (வயது 18), சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று தன்னுடைய நண்பர்களுடன் அம்பை சின்னசங்கரன்கோவில் தாமிரபரணி ஆற்றில் குளித்தார். அப்போது ஆற்றின் ஆழமான பகுதியில் ரஜப் மீரான் எதிர்பாராதவிதமாக மூழ்கினார். இதனைப் பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, ஆற்றில் இறங்கி தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு வரையிலும் தேடியும் ரஜப் மீரானை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரை தேடும் பணி நடக்கிறது.


Next Story